துலாம் ராசி அன்பர்களே, 2020ம் ஆண்டு உங்களது ஒவ்வொரு செயலும் தெய்வ அருளால் சிறப்பாக செய்ய சகல செல்வங்களும் பெற்று வாழும் பாக்கியம் கிடைக்கும். மனதில் அசாத்தியமான தைரியமும், உடலில் சுறுசுறுப்பும் நிறைந்திருக்கும். சென்ற ஆண்டில் முடியாமல் இழுபறியில் நிற்கும் காரியங்களை தற்போது முடிக்க முடியும். எந்த ஒரு செயலிலும் நிதானித்து செயல்படுவது நல்லது. நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் கிட்டும். பொருளாதார ரீதியாக அதிக சிரமம் ஏதும் இருக்காது. சொத்து விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. புது நபர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டாகும். குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டிவரும். உறவினர்களிடம் இருந்து சற்று ஒதுங்கியே நிற்கவும். இந்த வருடத்தில் நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் கடுமையாக பேசும் வார்த்தைகள் மற்றவர்களை மனதை புண்படுத்தும். இந்த வருடத்தில் உங்கள் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். பயணங்கள் அடிக்கடி நிகழும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும். வீடு மனை ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. தைரியம் அதிகரிக்கும் அதிக புகழ் உண்டாகும். எதிரிகள் பலமிழந்து போவர்.. பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பர். நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும். தியானம், யோகா செய்வது நன்மை தரும். உங்களுக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் உயர்வாக இருக்கும். இதற்காக அவர்களுக்கு நிறைய பணம் செலவிட வேண்டும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தியாகும். பண வரவு தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் தனவரவு உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெறும். பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள் சேர்க்கை உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்கள், உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். நீங்கள் கொடுத்த கடன்களும் சரியான வட்டியுடன் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். ஒரு சிலருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து அதனால் ஆதாயமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு புதிய ஆடைகள், வீடு, வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். உங்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலர் திடீர் வெளியூர் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.
உத்தியோகத்தில் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். சிலர் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்க பெறுவர். சகஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில், வியாபாரம் மற்றும் விரிவாக்க முயற்சிகள் சிறப்பான வெற்றிகளை பெறும்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831