விருச்சிக ராசி அன்பர்களே, 2020ம் ஆண்டு நன்றாக இருக்கும், ஆனால் நடுத்தரமானது சற்று கடினமாக இருக்கும். பொருளாதார நிலையை உயர்த்தும். தொடர்ந்து வரும் இடைஞ்சல்களை துணிச்சலுடன் சமாளிக்க முடியும். மனதில் தைரியம் கூடும். புதிய முயற்சிகள் தடைபட்டாலும் சரியான நேரத்திற்காகக் காத்திருக்கவும். எந்த ஒரு காரியத்திலும் யோசித்து இறங்குவது நல்லது. திறமையான பேச்சின் மூலம் உங்கள் பணிகளை சாதித்துக்கொள்ள முடியும். யாரிடம் எப்படிப் பேசினால் எடுத்த காரியம் வெற்றி பெறும் என்பது உங்களுக்கு நன்கு தெரியும் வாழ்க்கைத்துணையுடன் உங்களது உண்மையான உள்ளுணர்வினை பகிர்ந்து கொள்ள வேண்டும். மனதிற்குள்ளேயே தேவையற்ற பிரச்சனைகளை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பூர்வ புண்ணிய சொத்துக்களில் உங்கள் பங்கு கிடைக்கும். மனதிற்குள் இருந்து வரும் எதிர்காலம் பற்றிய கற்பனை நிஜமாகும். வெளிநாடு செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் ஒரு நல்ல நேரத்தை செலவிட முடியும். முடிவெடுக்காமல் இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக் எடுக்க முடியும். சமுதாயத்தில் உயர்ந்த நிலைமை உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடலில் ஏற்பட்ட உபாதைகள் நீங்கி உற்சாகம் ஏற்படும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்ற முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும். பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி பெற்றோர் பெருமைப் படத் தக்க வகையில் குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உடன்பிறப்புகளிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். உங்கள் பேச்சில் பொறுமை மிகவும் அவசியம். அடிக்கடி உடல்நல பாதிப்புகள் இருப்பதுபோல் இருக்கும். மனசஞ்சலங்கள் அதிகம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை, கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டு, பொருள் விரயமும் சிலருக்கு உண்டாகும். ஆண்டின் பிற்பகுதியில் இது வரை உங்களுக்கு இருந்து வந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் சிலருக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன் தொகைகள் யாவும் உங்களுக்கு வந்து சேரும். உங்களின் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒதுங்கி நிற்பர்.
உத்யோகத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்கள் சிலருக்கு கிடைக்காது. உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நெருக்கடி ஏற்படும். உங்கள் வியாபார ரீதியன பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில், வியபாரத்தில் சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி பெற முடியும். தொழில் முறையில் அதிக அலைச்சலைக் காண நேர்ந்தாலும் அதற்குரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
பரிகாரம் : உங்கள் ராசிக்குரிய எளிய பரிகாரங்கள் செய்து வந்தால் நலம் மிக்க ஆண்டாக அமையும்.
முக்கிய குறிப்பு : இந்த 2020ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்
தனுசு
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831