மீன ராசி அன்பர்களே, 2021-ல் அடி எடுத்து வைக்க போகும் உங்களுக்கு, என்ன பலன்கள் நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம். மனதில் நினைத்த காரியங்களை அமைதியாக நியாயமான முறையில் சாதிக்க முடியும். விடை தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மற்றவர்களை கவரும் வகையிலான பேச்சு சாமர்த்தியம் உங்களுடைய மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. சிக்கலான நேரத்தில் அமைதி காப்பதன் மூலம் பிரச்சினையிலிருந்து வெளியே வர முடியும். பொருள் வரவிற்கு வருடம் முழுக்க பஞ்சம் இருக்காது. பொருளாதார நிலையில் லேசான சிரமத்தினைத் தவிர குறிப்பிடத்தக்க சிரமமான சூழ்நிலை ஏதும் வராது. உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை வரும். தகவல் தொடர்பு சாதனங்களால் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டு. உறவினர்கள் சிலர் பிரச்சினை ஏற்படுத்துவர். சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உள்ளாகும். சொத்து விவகாரத்தில் சில வில்லங்கம் இருக்கும், அதே நேரத்தில் புதியதாக சொத்துக்கள் வாங்கும்போது அவற்றினுடைய மூலப் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ்கள் போன்ற முறையான ஆவணங்களை சரிபார்த்து வாங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தவும்.
சொத்து விவகாரங்களில் முன்பின் தெரியாதவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும்போது மனதிற்குப் பிடிக்காத விஷயங்கள் நடக்கலாம். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனங்களை புதுப்பிக்க முடியும். கடன் கொடுக்கல் வாங்கலில் எதிரிகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இவ்வருடத்தில் கையிருப்பு கரைந்தாலும் வங்கிக்கடன் உதவியுடன் சேமிப்பில் கவனம் செலுத்த முடியும்.
இந்த ஆண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார நிலை சிறப்பான முறையில் இருக்கும். வருமானத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு எந்தவித பிரச்னையும் இருக்காது. நீங்கள் புதிய வாகனம் அல்லது வீடு வாங்க முடிவு செய்யக்கூடும். பொருளாதார நெருக்கடி வரக்கூடும். குடும்ப வாழ்க்கைக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவை பெற முடியும், மேலும் அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த ஆண்டு திருமண வாழ்க்கைக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உடல்நலம் குறித்து விழிப்புணர்வு அவசியம்.
பொருளாதார வாழ்கையில் கலவையான பலன் கொண்டுவரும், ஏனென்றால் முதலிருந்தே உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கும் சனி பகவான் இந்த ஆண்டு நல்ல பலன் தருவதுடன் பல வழிகளில் வருமானத்தை அதிகரிக்கவும் செய்வார். உங்கள் பொருளாதார நிலைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
உத்யோகத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். உத்யோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பர். உத்யோகத்தில் நல்ல நேரம் கைகூடி வரும். உங்கள் கடின உழைப்பும் மற்றும் முயற்சியும் தொடரவும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். அவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம் : சித்தர்கள் வழிபாடு சிறப்பான பலனை தரும்.
இந்த 2021-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831