மேஷ ராசி அன்பர்களே, இந்த 2021-ல் அடி எடுத்து வைக்க போகும் உங்களுக்கு, என்ன பலன்கள் நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம். இந்த 2021 புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை. இதுவரை பல தடைகளையும், தாமதங்களையும் சந்தித்து வந்த நீங்கள் அதில் இருந்து மெல்ல மீண்டு வர போகிறீர்கள். வருகின்ற புதிய 2021 ஆண்டு மிகவும் உற்சாகமாகம், தைரியம் மற்றும் பல மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பல முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சனி பகவான் இருப்பதால் நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் எதிர்பார்த்த பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார வாழ்க்கையைப் பற்றி பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு இயல்பை விட சற்று சிறப்பாக இருக்கும். அன்றாட வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கும், இது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். ஆரம்பத்தில், பொருளாதார விஷயங்களில் பலவீனம் இருக்கும். இருப்பினும், இது இருந்தபோதிலும், உங்கள் நிதி வாழ்க்கையை மேம்படுத்த முடியும். பொருளாதார வகையில் பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். சில காரணங்களால் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். வீட்டிலிருந்து விலகி இருக்கும்போது, நீங்கள் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெற மாட்டீர்கள். உத்யோகத்தில் ஏராளமான வேலைகள் இருப்பதால், உங்கள் குடும்பத்திற்கு நேரம் கொடுக்க முடியாது, இதன் காரணமாக குடும்பத்தினரும் உங்களிடம் கோபப்படுவர். ஏனென்றால், ஆண்டின் தொடக்கத்தில் பணத்தை இழக்க வாய்ப்புகள் இருக்கும்போது, நடுவில் வரும் குரு பெயர்ச்சியின் போது, உங்களுக்கும் ஏராளமான செல்வங்கள் கிடைக்கும். இந்த ஆண்டு உங்கள் நிதி வாழ்க்கைக்கு ராகுவின் பார்வை நல்லதாக இருக்கும். ஆண்டின் முன் பாதி வரை குடும்ப மகிழ்ச்சியைப் பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலைகள் காரணமாக நீங்கள் அவர்களிடமிருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கும், இதன் காரணமாக உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு நேரம் அவ்வளவு நன்றாக இருக்காது. மனதில் நினைத்த காரியங்களை, உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். முறையான ஆலய வழிபாடுகளை மேற்கொள்வது வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். இந்த வருடம் ஏற்றமும், மாற்றமும் உங்களைத் தேடிவரும். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு தனித்து செயல்படுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. செய்து வரும் தொழிலில் நல்ல லாபம், உத்யோகத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து, உயர்வு ஏற்படும். உண்மையான செயல்பாட்டிற்கும் கடினமான உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்களை வாங்க முடியும். அதிகமாக கடன் வாங்காமல் இருந்தால் நன்மை உண்டாகும். புதிய தொழில் முயற்சி நல்ல பலனை தரும். பூர்விக சொத்துக்களில் நல்ல பலன் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படாமல் இருக்க அவர்களை அனுசரித்து செல்லவும். இது நாள் வரையில் ஏற்பட்டு வந்த தடைகள் அகலும். உத்யோகம் தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிக அலைச்சல் உண்டானாலும் இறுதியில் நல்லதே நடக்கும். மனதில் புதிய எண்ணங்கள் உதயமாகும். இந்த ஆண்டு ஆரோக்கியம் மேம்படும், மேலும் நீங்கள் எந்தவொரு பழைய நோயிலிருந்தும் விடுபடலாம். இந்த ஆண்டு, சிறிய சிக்கல்களைத் தவிர வேறு எந்த பெரிய நோயும் உங்களுக்கு இருக்காது. இதற்காக, நீங்கள் உண்ணும் உணவையும் அன்றாட வழக்கத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்க முடியும். பொழுது வாழ்வில் ஆர்வம் கூடும். வம்பு வழக்குகள் தீரும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இழந்த சொத்துக்களை திரும்ப பெறும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகள் தீரும். வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். புது வீடு கட்டி அல்லது வீடு வாங்கிக் அதில் குடி ஏறுவீர்கள். உத்யோகத்தில் இருந்த மந்த நிலை மாறும். நண்பர்கள் பக்கபலமாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் சீராக நடைபெறும். தன்னம்பிக்கையோடு உங்கள் செயல்களை செய்ய தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். நீங்கள் கேட்ட இடத்தில் கேட்ட தொகை கிடைக்கும். எதிர்கால முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும் குரு பார்வை கைகொடுக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். மனதில் இருந்த பாரம் குறைந்து மகிழ்ச்சி கூடும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் விலகும். பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் இருந்த விரிசல்கள் அகலும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைய நடைபெறும். உடன்பிறந்தவர்களால் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதிய வாகனம் வாங்கும் அமைப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். மனக் கவலை காணாமல் போகும். உங்கள் எதிர்கால நலன் கருதி எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டு. எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம். மொத்தத்தில் இந்த ஆண்டு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அவ்வப்போது உடல் சோர்வு வந்து நீங்கும். நிழல் கிரகமான கேது மற்றும் ராகுவின் பார்வை உங்கள் ராசியின் எட்டாவது மற்றும் இரண்டாவது வீட்டில் இருப்பதால் ஒரு சில உடல் உபாதைகள் வர வாய்ப்புண்டு. குறிப்பாக உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. ஒரு சில பிரச்சனைகளை தவிர இந்த ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியவாழ்கை நன்றாகவே இருக்கும்.
பரிகாரம் : சஷ்டி விரதம் இருந்து முருகரை மனதார வணங்கி வழிபடவும்.
இந்த 2021-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831