மிதுன ராசி அன்பர்களே, இந்த 2021-ல் அடி எடுத்து வைக்க போகும் உங்களுக்கு, என்ன பலன்கள் நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம். வருகின்ற புதிய ஆண்டில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். உங்கள் பொருளாதார வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஒரு சில பண விரயங்கள் ஏற்பட்டாலும், திடீர் பண வரவுக்கான வாய்ப்பும் உண்டு. இந்த ஆண்டு நீங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குடும்ப வாழ்க்கைக்கு இந்த ஆண்டு மிகவும் நன்மையானதாக இருக்கும், ஏனென்றால் வீட்டில் மங்களகரமான காரியங்கள் ஏற்பாடு செய்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். இந்த ஆண்டு சனி மற்றும் குரு உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருக்கும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்கள் பொருளாதார வாழ்கை சாதாரணமாக இருக்கும். ஏனென்றால் குரு மற்றும் சனி உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருப்பார். சனி பகவான் ஆண்டு முழுவதும் இதே வீட்டில் இருப்பார். குரு மற்றும் சனி ;பெயர்ச்சியால் பொருளாதார இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களுக்கு அளவுக்கு அதிகமான செல்வம் கிடைக்கவும், மற்றும் உங்கள் பொருளாதார வாழ்கை வலுவாக இருக்கும். பொருளாதார வாழ்க்கைக்கு இந்த ஆண்டு உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் ராகு இருக்கும் காரணத்தினால் உங்கள் செலவு அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். குடும்ப வாழ்கை மிகவும் சாதகமாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டின் தேவைக்கேற்ப செலவு செய்வதை காணக்கூடும், இதனால் குடும்ப உறுப்பினருக்கும் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். இந்த ஆண்டின் நடுவில் குடும்ப சார்ந்த பிரச்சனை காரணத்தால் உங்களுக்கு மன சங்கடம் ஏற்படும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், இந்த ஆண்டு உங்கள் திருமண வாழ்க்கையில் பல மாற்றங்கள் கொண்டுவரக்கூடும். உங்களுக்கும் வாழ்கை துணைவியாருக்கிடையே அன்பு அதிகரிக்கும். மேலும் இருவருக்குள் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து போகும்.
உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு கொஞ்சம் பலவீனமாக தான் இருக்கும், ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் எட்டாவது வீட்டில் சனி மற்றும் குரு அமர்ந்திருப்பார் அல்லது உங்கள் ஆறாவது வீட்டில் கேது இருப்பதால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரக்கூடும். இந்த நேரத்தில் உங்களை சுயமாகவே கவனித்துகொள்வது நல்லது. உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்து முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் சக ஊழியர்களின் உதவியால் பல நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கிரகங்களின் பெயர்ச்சியின் பொது, நீங்கள் ஒவ்வொரு வேலையும் கொடுத்த வேலைக்கு முன்பை செய்து முடித்து விடுவீர்கள். தொழில், வியாபாரம் வகையில் நிறைய சவால்களை இருக்கும், ஆனால் நீங்கள் இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும்.
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வழிபடுவது சிறப்பான பலனை தரும்.
இந்த 2021-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831