ரிஷப ராசி அன்பர்களே, இந்த 2021-ல் அடி எடுத்து வைக்க போகும் உங்களுக்கு, என்ன பலன்கள் நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம். அஷ்டம சனி பிடியில் இருந்து விடுபட்ட நீங்கள் இனி நல்ல பலன்களை எதிர்நோக்கி காத்து இருக்கலாம். 9ம் வீட்டில் இருக்கும் சனி பகவான் ஆண்டு முழுவதும் நல்ல விஷயங்களை செய்ய போகிறார். நீங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றம் மற்றும் முன்னேற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். பொருளாதார வாழ்க்கையிலும் சிறப்பான ஒரு நிலையை எட்ட முடியும். பணத்தை சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்ப வாழ்க்கையில் ஆண்டு தொடக்கத்தில் பதற்றத்தை தரும். குடும்பத்தில் சில ஏற்றத்தாழ்கள் இருக்கும். எனவே திருமண தொடர்பான காரியத்தில் ஒரு சில பிரச்சனைகள் வரும். காதல் விவகாரத்தை பொறுத்தவரை சுமாராகவே இருக்கும், இருப்பினும் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்கள் மீது கவனம் செலுத்தவும். எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு செலவு அதிகரிக்கும் மற்றும் நேரத்திற்கு ஏற்ப உங்கள் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த அவசியமாகும்.
பிரியமானவர்கள் மற்றும் வாழ்கைதுணைக்கு நீங்கள் செலவு செய்யக்கூடும். குரு உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருக்கும் காரணத்தினால் குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மையான பலன் அளிக்கும். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருப்பார், இதனால் பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.
குடும்ப வாழ்க்கையில் இந்த ஆண்டு குறைவான பலன் கிடைக்கும். உங்கள் குடும்பத்தின் ஆதரவு பெரியளவில் கிடைக்காது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனையும் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர் அல்லது புதிய உறுப்பினரின் வருகை இருக்கும். இந்த நேரம் குடும்ப உறுப்பினற்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினற்கிடையே யாருடனாவது உங்களுக்கு சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எதாவது வேலை தொடர்பாக உங்கள் வீட்டை விட்டு விலகி செல்லக்கூடும். உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண வாழ்கையின் கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், ஏனென்றால் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் கேது அமர்ந்திருப்பார், இதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் அதிகமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஆண்டு ராகு-கேது முறையே உங்கள் ராசியின் முதல் மற்றும் ஏழாவது வீட்டில் அமர்ந்திருக்கும்.
உத்யோகத்தில் எதிர்பார்த்த வெற்றியைத் கடின உழைப்பிற்கு பின் பெற முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழில் சார்ந்த விஷயங்களில் சில சிரமங்கள் இருக்கலாம். தொழில் வகையில் முழுமையான வெற்றி கிடைக்கும். சனி பகவான் நன்மையான பார்வையால் உங்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்த்த வேலை மாற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். இந்த ஆண்டு, நீங்கள் விரும்பிய இடமாற்றம் மற்றும் பணிசுமையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படித்து கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பான பலனை தரும்.
இந்த 2021-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்..
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831