 DANUSU Yearly Rasi Palan
   
			DANUSU Yearly Rasi Palan
            இனிய ஆங்கில புத்தாண்டு 2024-ல் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி அன்பர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்தப் 2024 ஆண்டு, சச்சரவுகள் இல்லாத ஆண்டாக அமையப் போகிறது. இந்த வருடம் முக்கியமாக செய்ய வேண்டியது உங்கள் கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். 2024 இன் ஆரம்பம் உங்களுக்கு அற்புதமானதாக இருக்கும். உங்கள் 5 வது வீட்டில் குரு மற்றும் 3ஆம் வீட்டில் சனி உங்கள் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். ராகு உங்கள் 4வது வீட்டிற்கும், கேது 10வது வீட்டிற்கும் சஞ்சரிப்பது கலவையான பலன்களையே தரும். ஆனால் ராகு மற்றும் கேதுவின் தோஷங்கள் உங்கள் 3ம் வீட்டில் இருக்கும் சனி பகவானின் பலத்தால் குறையும். எங்கும் எதிலும் வெற்றி காண முடியும். தொழில் மற்றும் நிதி வளர்ச்சியில் மகிழ்ச்சி இருக்கும். புதிய வீடு வாங்கி அதில் குடியேற முடியும். சுப காரிய செயல்பாடுகளை நடத்த இது ஒரு நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமூகத்தில் நல்ல பெயரும் புகழும் பெறும். ஏப்ரல் 30, 2024 வரை இந்த அதிர்ஷ்டங்களை நீங்கள் அனுபவிக்க முடியும். ஆனால் மே 01, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையிலான காலம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். சனி நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் போது உங்கள் 6ஆம் வீட்டில் குருவின் தாக்கம் உணரப்படும். நீண்ட கால நோக்கங்களில் வெற்றி காண முடியும். ஆனால் குறுகிய கால திட்டங்கள் சரியாக அமையாது. இந்த கட்டத்தில் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். உத்யோக பணி சராசரியாக இருக்கும். தொழில் மற்றும் நிதியில் சராசரி வளர்ச்சி கிடைக்கும். ஜன. 01, 2024 முதல் மே 01, 2024 வரையிலான பொற்காலத்தை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் வாழ்க்கையில் நன்றாக நிலை பெறுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினால், முதல் பாதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். செல்வம் மற்றும் அறிவு திறன் அதிகரிப்பதற்கான அறிகுறிகளும் தெளிவாகத் தெரியும். வீட்டுக் கவலைகளும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த 2024 ஆண்டு தனுசு ராசிகாரர்களுக்கு எதையும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் பிறக்கும்.எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம்.
பரிகாரம் : குரு பகவானை தீபம் ஏற்றி வழிபடவும்
முக்கிய குறிப்பு : இந்த 2024ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
            
Astrology Predictions Written By : 
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831