| 2026 தமிழ் ஆண்டு ராசி பலன்கள் |
|
(2026) ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி முதல் டிசம்பர் 2026 வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மாதங்களுக்குரிய தலைப்பில் மேஷ ராசியினர் முதல் மீன ராசியினர் வரை பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. "2026 புத்தாண்டு ராசி பலன்கள் என்பது பொதுவானது". ஒவ்வொருவருக்கும் ஜனன கால ஜாதகம் என்று ஒன்று உண்டு. ஜாதகப்படி சுப யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடப்பவர்களுக்கு இப்புத்தாண்டில் நற்பலன்கள் அதிகரிக்கும். கோசாரமும், தசா புக்தியும் சாதகமாக உள்ளவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். கோசாரப்படியும், தசாபுக்திப்படியும் கிரகநிலை சிறப்பாக இல்லாதவர்களுக்குக் கெடுபலன்கள் உண்டாகும். அப்படிப்பட்டவர்களும் தெய்வப்பணிகளில் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால் கெடுபலன்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். பரிகார சாஸ்திரம் என்பதே அதற்காகத்தானே. கிரகப் பிரீதி செய்து கொள்ளலாம். எனவே எதற்கும் கவலைப்பட வேண்டாம். நல்லதே நடக்கும். இனி ஒவ்வொரு ராசிக்காரருக்கும் இந்தப் புத்தாண்டில் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம். ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புது வருடம் 2026 - நிகழும் விசுவாவசு வருடம், மார்கழி மாதம் 17-ம் நாள் வியாழன் கிழமை அன்று வளர் பிறை துவாதசி திதியில், கீழ்நோக்குடைய கார்த்திகை நட்சத்திரம், (கன்னி லக்னத்தில்) - சந்திரன் – ரிஷப ராசியில், சூரியன் - தனுசு ராசியில், புதன் - தனுசு ராசியில் , சுக்கிரன் - தனுசு ராசியில், செவ்வாய் - தனுசு ராசியில், ராகு - கும்ப ராசியில், கேது – சிம்ம ராசியில், இவ்வருடம் பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய கிரகங்களான குரு பகவான் மேஷ ராசியிலும், சனி பகவான் கும்ப ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். குரு மற்றும் சனி கிரகத்தினை கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2026 எழுதப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் நிகழப்போகிறது. முக்கிய கிரகங்களான சனி, குரு பெயர்ச்சி வரிசையாக நிகழப்போகிறது. 2026ஆம் ஆண்டு மார்ச் 6ம் தேதி முதல் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவான் 2026 மே மாதம் வரை மிதுன ராசியில் பயணம் செய்கிறார். ஜூன் 1ம் தேதி அன்று குரு பகவான் கடக ராசிக்கு மாறுகிறார். இந்த வருடம் பிறக்கும் பொழுது குரு பகவான் மிதுன ராசியிலும் சனிபகவான் கும்ப ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் மற்றும் குரு பகவான் சஞ்சாரத்தையும் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தையும் கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2026 எழுதப்படுகிறது. ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், (Ph.d Astrology) - செல் : 9003019831 / 9944719963 |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831