MITHUNAM Yearly Rasi Palan
(மிருகசீரிடம்3,4ஆம்பாதம்,திருவாதிரை1,2,3,4ஆம்பாதம்,புனர்பூசம்1,2,3ஆம் பாதம்முடிய)
மிதுன ராசி நேயர்களே, இந்த 2026ம் ஆண்டு ஒரு கலவையான ஆண்டாக இருக்கும், சில சிரமங்கள் இருக்கலாம், ஆனால் பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகளும் உள்ளன. தொழில் மற்றும் நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் ஆன்மீக ரீதியாகவும் வளர்ச்சி அடைய முடியும். எந்த இரு விஷயத்திலும் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். புதிய முயற்சிகளில் தாராளமாக மேற்கொள்ளலாம்.உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். உற்றார் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்து முடிக்கவும். எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வீண் கோபத்தை குறைப்பதால் பல வகையில் நன்மை உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். முக்கிய கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை எதிர்பார்த்தது போல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படவும். அடுத்தவர்களின் ஆலோசனையை விட, உங்களின் சுயஅறிவே பயன்படுத்துவதால் பல இடங்களில் வெற்றி பெற முடியும். ஆன்மீக பணிகளுக்காக நிறைய செய்ய வேண்டிவரும். குடும்பத்துடன் சென்று பிராத்தனைகளை நிறைவேற்றவும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்ல வேண்டாம். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். யாருக்கும் வாக்கு தர வேண்டாமாம் பணவரவு சிறிது குறைவாக இருந்தாலும் குடும்பத் தேவைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கடன் தொல்லைகள் ஏற்படாது. பிரியமானவர்களால் பயன் அடைய முடியும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புத்திசாலித்தனத்தால் பல புதுமைகளை நிகழ்த்த முடியும். துணிந்து செய்யும் காரியங்கள் அனைத்தும் லாபகரமாகவே முடிவடையும். சொந்தமாக வீடு வாங்கும் எண்ணம் வரும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாறி செல்வர். நவீன பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். கடன் பிரச்சனை ஓரளவு தீரும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். உங்கள் தேவைகள் நாளடைவில் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் இதுவரை தடைபட்டுவந்த சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். புதிய வேலைக்கு மாறுவது தொடர்பான யோசனை வரும். தொழில், வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளவும். உங்கள் நேர்த்தியான அணுகுமுறையால் பல வெற்றிகள் குவியும் ஆண்டாக அமையும்
பரிகாரம் : துர்க்கை அம்மன் வழிபாடு மன தைரியம் கொடுத்து இன்னலிலிருந்து காக்கும்.
முக்கிய குறிப்பு : இந்த 2026-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும். சந்திராஷ்டம நாட்களில் விநாயகர் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நன்மை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831