SIMMAM Yearly Rasi Palan
மகம் 1,2,3,4 ஆம் பாதம், பூரம்1,2,3,4 ஆம் பாதம், உத்திரம்1 ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசி நேயர்களே, இந்த 2026ம் ஆண்டு குடும்ப வாழ்வில் சில ஏற்ற இறக்கங்கள் கலந்த பலன்களைக் பார்க்கலாம். இந்த ஆண்டு எதிலும் தைரியதுடன் செயல்பட்டு பல்வேறு முன்னேற்றங்களை பெற முடியும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வரவு செலவு கட்டுக்குள் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சமநிலையைப் பேணுவது அவசியம். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். குடும்ப நலனில் அக்கறை தேவை. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும். பொழுதுபோக்கு ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிவரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். வீடு வாங்கும் கனவு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடந்த ஆண்டு நடக்காமல் இருந்த முக்கிய காரியங்கள் இந்த ஆண்டு நிச்சயம் நடக்கும். எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் இல்லையென்றாலும் பொருளாதார ரீதியாக அதிக சிரமம் ஏதும் இருக்காது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர சிறிது தாமதமாகும். பொருளாதார நிலை சீராக இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளை முன் வந்து ஏற்றுக்கொள்ளவும். பிரியமானவர்கள் உதவியாய் இருப்பர். நட்பு வட்டம் விரிவடையும். வேற்று மதத்தவர் கூட நண்பர்களாகவர். குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்து சற்று ஒதுங்கி நிற்பது நல்லது. உங்கள் வாழ்க்கை தரம் உயரும். மனதிற்கு சரி என பட்டதை உடனே செய்யவும். குடும்பத் நிர்வாகத்தில் உங்கள் திறமை முழுவதும் வெளிப்படும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். பயணங்களால் அலைச்சல் கூடும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் சிக்கல் இருக்கும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லாமல் பார்த்துக்கொள்ளவும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். அடுத்தவரின் கருத்து, ஆலோசனைக்கு செவி சாய்த்து, அதில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஏற்கனவே முடிவு செய்த திருமண ஏற்பாடுகள் இந்த வருடம் தொடரும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். புதிய வீடு, மனை, சொத்து வாங்கும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்யோகத்தில் ஈகோ பிரச்சனையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த ஆண்டு சகல விதத்திலும் நன்மை நிறைந்த ஆண்டாக அமையும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம், சூரிய வழிபாடு மேன்மையை தரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2026ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும். சந்திராஷ்டம நாட்களில் விநாயகர் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நன்மை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831