Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan
குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள் 2023-2024
(22.04.2023 முதல் 01.05.2024 வரை)

குரு பெயர்ச்சி 2023 - 2024: சமீபத்தில் அதாவது ஜனவரி 17ல் தான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி நடந்தது. தற்போது மற்றொரு வருட கிரகம், முழு சுப கிரகமான குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு ஏப்ரல் 22ம் தேதி பெயர்ச்சி ஆக உள்ளார். (தனது ஆட்சி வீடான மீன ராசியிலிருந்து நட்பு வீடான மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி, அங்கிருக்கும் ராகுவுடன் அக்டோபர் 30, 2023 வரை இணைந்து இருப்பார்.) குரு பகவான் வருடம் ஒரு முறை பெயர்ச்சி அடைவதால் பல மாற்றங்கள் உருவாகும்.
கிரக பெயர்ச்சிகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படும் குரு பெயர்ச்சி இந்தாண்டு சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9ம் தேதி ஆங்கில வருடம் 2023 ஏப்ரல் 22யன்று ஆம் தேதி சனிக்கிழமை வளர்துதியையில் ஆயுஷ்மான் நாமயோகம் கெளலவ கரணத்தில் சுக்ல திருதியில் பிரகஸ்பதியான தேவ குரு மேஷத்தில் பெயர்ந்து சூரியன் புதன் மற்றும் கேதுவோடு செயல்படுகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி இதுவே குருப் பெயர்ச்சியாகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம்.
குரு தான் நின்ற இடத்தை விட பார்த்த இடங்களை வலிமை படுத்துவார். ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார், அதுவே நடக்கும். தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குரு பகவானால் நன்மையே நடக்கும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வழிபடுவது எல்ல வகையிலும் நன்மை தரும்.

வாக்கிய பஞ்சாங்கப்படி - நடைபெறும் பிலவ வருடம் - பங்குனி மாதம், 30ஆம் நாள் (ஏப்ரல் 13) இரவு கடந்து, ஆங்கிலத் தேதி 14-4-2022 - வியாழக்கிழமை அதிகாலை மணி 4.09க்கு - குரு கிரக ராசி மாற்றமாகும்.

பெரும்பாலும் தமிழக கோவில்களில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எல்லாம் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் நடக்கிறது.

குரு பகவானுக்கு முக்கிய தலமாக கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி பிரசித்தியாக கருதப்படுகிறது.

குரு பெயர்ச்சின் போது கிரக நிலை :

மேஷத்தில் - சூரி, குரு, புதன், ராகு
ரிஷபத்தில் - சுக்கிரன், சந்திரன்
மிதுனத்தில் - செவ்வாய்
துலாத்தில் - கேது
கும்பத்தில் – சனி

குரு பலன் தரும் ராசிகள்: மீனம், தனுசு, துலாம், சிம்மம், மிதுனம்

குரு பலன் தரா ராசிகள்: ரிஷபம், கன்னி

குரு சம பலன் தரும் ராசிகள்: மேஷம், கடகம், விருச்சிகம், மகரம், கும்பம்


___________________________________________________________________
2023 குரு பெயர்ச்சி பலன்களை கணித்து எழுதிவர்
ஆலந்தூர் A .வினோத் குமார், Ph.d (Astrology), அலைபேசி : 9003019831

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.