Guru Peyarchi Palan - குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi Palan
குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள் 2020 - 2021

ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய குரு பெயர்ச்சி இந்த வருடம் 20-11-2020 அன்று நிகழ்கிறது. விகாரி வருடம் வருடம் கார்த்திகை மாதம் 6ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

வியாழ நோக்கம் : ராசிக்கு 2,5,7,9 11 ஆம் ராசிகளில் குரு நிற்கும் காலம் வியாழ நோக்கம் கொண்டது. குரு ஒரு முழுமையான சுப கிரகம். குரு கோடி தோஷம் போக்க வல்லவர் என்றும் குரு பார்க்க கோடி நன்மை என்றும், என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம். குரு பகவான், ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது குடும்பம் நல்ல முறையில் இருக்கும். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 13 மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆகும். இப்படி ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.

குரு பெயர்ச்சி பொது பலன். : பொதுவிதிப்படி குரு அவரவர் ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும்போது நற்பலனும், ஜென்மம், 4,10-ம் இடங்களில் வரும்போது சமபலனும், 1,3,6,8,10,12 ஆகிய இடங்களில் வரும்போது துர்பலனும் நடக்கும். ஜனன ஜாதகத்தில் குரு நின்ற இடத்துக்கு கோட்சர குரு எத்தனையாவது இடத்தில் மாறுகிறார் என்பதை பார்த்து பலன் சொல்லுவது சிறப்பு.

கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். மேலும் குரு - தான் நின்ற இடத்தில் இருந்து 5,7,9-ம் இடங்களை பார்ப்பார். தனுசு ராசி, ராசி, ராசிக்கு பார்வை கிடைக்கும்.

கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் குரு பெயர்ச்சி நடக்கும்).

பலன்பெறும் ராசிகள்:
ரிஷபம், கடகம், கன்னி, தனுசு,

சமபலன் பெரும் ராசிகள்:
மேஷம், துலாம், மகரம்

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:
மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம்


குரு பரிகாரம்:
அவரவர் ஊர்களுக்கு அருகில் உள்ள நவகிரஹ கோவில்களில் நவக்கிரத்தில் அமர்ந்து உள்ள ஸ்ரீகுருவுக்கு
நெய்தீபம் ஏற்றி வழிபடவும். முறையான பரிகாரம் செய்வதன் மூலம் குருவால் ஏற்படக்கூடிய தோஷங்களும் குறைந்து குருவருள் திருவருளாக மலரும் என்பது உண்மை. குருவை என்றும் வணங்கவேண்டும். ஒட்டு மொத்தமான மகிழ்ச்சிக்கு அது உதவும்.

திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும். தொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது, குரு பெயர்ச்சி பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை சாதகமாகிக் கொள்ள பிராத்தனை, பூஜை, பரிகார முறைகளை கடைப்பிடிக்கலாம்.

ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக்கிழமைகளில், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவகிரக குருவையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு நலம் பெறலாம்.



குரு பெயர்ச்சி பலன்களை கணித்து எழுதிவர்
ஆலந்தூர் " A .வினோத் குமார், Ph.d (Astrology)
அலைபேசி : 9003019831


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




 
Tamil Daily Calendar 2021 | Tamil Monthly Calendar 2021 | Tamil Calendar 2021 | Tamil Muhurtham Dates 2021 | Tamil Wedding Dates 2021 |
Tamil Festivals 2021 | Nalla Neram 2021 | Amavasai 2021 | Pournami 2021 | Karthigai 2021 | Pradosham 2021 | Ashtami 2021 | Navami 2021 | Karinal 2021 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2020 | Tamil Monthly Calendar 2020 | Tamil Calendar 2020 | Tamil Muhurtham Dates 2020 | Tamil Wedding Dates 2020 |
Tamil Festivals 2020 | Nalla Neram 2020 | Amavasai 2020 | Pournami 2020 | Karthigai 2020 | Pradosham 2020 | Ashtami 2020 | Navami 2020 | Karinal 2020 | Daily Rasi Palan |