குரு பெயர்ச்சி பலன்கள் |
குரு பெயர்ச்சி பலன்கள் 2022 (14-ஏப்ரல் 2022 முதல் 22-ஏப்ரல் 2023 வரை) கிரக பெயர்ச்சிகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படும் குரு பெயர்ச்சி இந்தாண்டு பிலவ வருடம் கடைசி நாளான பங்குனி 30 மதியம் 3.49 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த வருடம் குரு பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மீனத்தில் ஆட்சி பெற்று அமரபோவதால் நன்மையே செய்வாரு என்று நம்பலாம். அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 14ம் தேதி நிகழும் தமிழ் சுபகிருது புத்தாண்டு ஒட்டி இந்த குரு பெயர்ச்சி நிகழ்ந்திருப்பதால், தமிழ்ப் புத்தாண்டில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம். குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம். ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார், அதுவே நடக்கும். தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குரு பகவானால் நன்மையே நடக்கும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வழிபடுவது எல்ல வகையிலும் நன்மை தரும். வாக்கிய பஞ்சாங்கப்படி - நடைபெறும் பிலவ வருடம் - பங்குனி மாதம், 30ஆம் நாள் (ஏப்ரல் 13) இரவு கடந்து, ஆங்கிலத் தேதி 14-4-2022 - வியாழக்கிழமை அதிகாலை மணி 4.09க்கு - குரு கிரக ராசி மாற்றமாகும். பெரும்பாலும் தமிழக கோவில்களில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எல்லாம் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் நடக்கிறது. குரு பகவானுக்கு முக்கிய தலமாக கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி பிரசித்தியாக கருதப்படுகிறது. குரு பலன் தரும் ராசிகள்: ரிஷப, கடகம், கன்னி, கும்பம் குரு பலன் தரா ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், குரு சம பலன் தரும் ராசிகள்: தனுசு, மீனம் குரு காயத்ரீ மந்த்ரம் : ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி | தன்னோ குரு : ப்ரசோதயாத் || ஓம் சுராசார்யாய வித்மஹே வாசஸ்பத்யாய தீமஹி | தன்னோ குரு : ப்ரசோதயாத் || _________________________________________________________________________ 2022 குரு பெயர்ச்சி பலன்களை கணித்து எழுதிவர் ஆலந்தூர் A .வினோத் குமார், Ph.d (Astrology), அலைபேசி : 9003019831 |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831