DANUSU
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்ப உறவுகள் மற்றும் தேவையற்ற செலவுகள் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டிய மாதமாகவும் இது அமைகிறது. கடின உழைப்புக்கான நல்ல பலன்கள் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் ஆதிக்கம் மேலோங்கும். வரவு சீராக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் எழக்கூடும். ஆடம்பரப் பொருட்கள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். கடன் மற்றும் முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பொதுவான உடல் நலம் சீராக இருக்கும். அதிகப்படியான வேலை சுமையால் மன அழுத்தம் அல்லது சோர்வு ஏற்படலாம். நல்ல தூக்கமும் ஓய்வும் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். குடும்பப் பொறுப்புகள் சற்று அதிகரிக்கும். உறவுகளில் சிலகட்டங்களில் சிறுசிறு குழப்பங்கள் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது குடும்பத்தில் நிம்மதியைத் தரும். உத்யோகத்தில் கவனமாக பணிகளை மேற்கொள்ளவும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 11,12,13 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com