கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தை செய்தாலும் பல முறை யோசித்து செய்வது உத்தமம். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை கேட்பது பல வகையில் உதவியாக இருக்கும். உடன் பிறப்புகளுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மனக்குழப்பம் தோன்றி மறையும். பெரிய மனிர்தர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மனநிம்மதி இருக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்கள் விரோதிகளும் நண்பரகளாக மாறி உதவி செய்வர். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடக்கும். வாழ்க்கை துணையுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது.ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் நல்ல மரியாதையும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : ஜனவரி 7,8,9 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com