கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் திட்டமிட்டு செயலாற்றுவதில் சில நேரங்களில் பின்னடைவு ஏற்படலாம். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் அசதி வரும். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சின்ன சின்ன சண்டைகள் உண்டாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பல நாட்களாக இழுபறியில் இருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களை முடிந்தவரை தவிர்க்கவும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். வேண்டியவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். குடியிருக்கும் வீட்டை மாற்ற நேரிடும். பழைய கடனை அடைக்க புது வழி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய சொந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 19, 20, 21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com