கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க நேரிடும். தெய்வ பக்தி அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த சஞ்சல நிலை மாறும். குடும்ப நபர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். மனதிற்குள் சிறு சிறு சங்கடங்கள் வந்தாலும் அதை பெரிது படுத்த வேண்டாம். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது முக்கியம். உடல் ஆரோக்யம் மேம்படும். பெற்றோர்கள் வகையில் சில மருத்துவ செலவுகள் வரும். குடும்ப நலனில் உங்கள் கவனம் அதிகம் செல்லும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்ற முடியும். வாகனம், வீடு போன்றவற்றால் அதிக செலவு ஏற்படும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்வருத்தங்கள் நீங்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சொத்து சம்பந்தமான வழக்குகளினால், நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. ஆன்மிகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 2,3,4 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com