மகர ராசி அன்பர்களே, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை தயார் படுத்திக்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததை போலவே எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தள்ளி போன காரியம் விரைவில் முடியும். நீங்கள் கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தாரால் அனாவசிய செலவுகள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் ஆதாயம் உண்டு. பணவரவில் ஏற்ற இறக்கம் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் பிரச்னைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு தேவையானதை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிர்பாராத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். நண்பர்களிடம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படும். புதுமையான விஷயங்களை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் ஏற்படும். வீட்டிற்கு தேவையான அனைத்தும் வசதிக்கேற்ப செய்து கொள்ள முடியும். குடும்ப நபர்களின் யோசனை கைகொடுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வைக்கவும். முக்கிய காரியங்களை நேரிடையாக சென்று செய்து முடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வரும் எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com