மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எடுக்கும் காரியங்கள் மற்றும் செயல்கள் யாவற்றையும் மற்றவர்களின் துணையில்லாமல் இனிதே செய்து முடிப்பது நல்லது. மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட கவலைகளும், கடன்களும், கஷ்டங்களும் விலகும். குடும்ப சேமிப்பை உயர்த்த முடியும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். விஐபிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உடல் நலம் பொறுத்தவரை தொந்தரவுகள் எதுவும் இருக்காது. வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம். நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்யும் காரியங்கள் தாமதமின்றி வெற்றி பெரும். எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்ய வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com