மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். மனதில் நினைத்த காரியத்தை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். குடும்ப விவகாரங்களில் கவனத்துடன் இருப்பது ரொம்ப அவசியம். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களை நாடி வருவர். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு புத்துணர்ச்சி தரும். உடல் நலம் சிறப்படையும். உடன்பிறப்புகளிடையே இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகள் தீரும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பெரியோர்களின் ஆலோசனைகளும் உதவியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். குடும்பத்தில் தங்களின் மதிப்பும், மரியாதையும் தானாகவே உயரும். தற்போது நடைபெறும் தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், சொந்த வீடு அமையும் பாக்கியமும் கிட்டும். உத்யோகம் தொடர்பாக வெளிநாடு சென்று வரும் பாக்கியம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் தொடர்பான எண்ணம் வரும்.
சந்திராஷ்டமம் :20,21,22 - கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com