மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் எப்போதும், குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வழி கிடைக்கும். பணம் பலவகையில் வந்து சேரும். அதிகப்படியான செலவுகளின் காரணமாக பொருளாதார ரீதியாக சில சிரமங்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை தக்கவைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஆடம்பர செலவினங்கள் அதிகரித்து வரும் அதே நேரத்தில் உடல்நிலையிலும் அதிக கவனம் செலுத்தவும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு சுப பலன்கள் உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது. வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன்-மனைவிக்குள் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்க துவங்கும். குடும்பத்தில் பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com