ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் உங்கள் கடமைகளை உணர்ந்து செயல் பட வேண்டியது அவசியம். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். கையில் எடுத்த வேலைகளை ஒரு சில தடங்கலுக்கு பின் முடிக்க முடியும். நெருக்கடி நிலை அகலும். குடும்பச் சுமை அதிகரிக்கும். விரோதிகளும் நண்பர்களாவர். எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த எதிர்ப்புகள் விலகும். பிரியமானவர்களிடம் இருந்து தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். சொந்தங்களால் வந்த வருத்தங்கள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வருமானத்தைப் பெருக்குவதற்கு பல நல்ல வழிகள் கிடைக்கும். குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் விலகும். உங்கள் பேச்சில் வேகமும், விவேகமும் இருக்கும். யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்களின் ஆதரவு கிடைத்தாலும் ஒரு அளவோடு பழகுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் விலகும். மற்றவர்களுக்கு உதவுவதாக சொல்லி தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் கானப்படும். மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க யோகா, தியானம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com