THULAM
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் கடினமான உழைப்புக்கு தக்க சன்மானம் கிடைக்கும். இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் விலகும். எதிலும் சுயமாக யோசித்து முடிவு எடுக்கவும். குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். எதிலும் விடா முயற்சியால் வெற்றி கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. வீடு வாகனம் தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். மனப்பிரச்னைகள் விலகும். சில நேரங்களில் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பர்கள் சிலரால் இடையூறுகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். குடியிருக்கும் வீட்டினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிவரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 23,24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com