விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு நிகழும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீகத்தில் மனதை செலுத்துவதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். நெருங்கிய உறவினர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் தன லாபம் இருக்கும். சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
( For Viruchikam : Daily - Weekly - Yearly )
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com