ராகு கேது பெயர்ச்சி பலன்கள் |
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (2022 - 2023) ஒரு ராசி கட்டத்தில் அதிக நாட்கள் இருக்கும் குரு, சனி, ராகு-கேது போன்ற பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்துப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது ராகு-கேது பெயர்ச்சி மிக முக்கிய பெயர்ச்சியாகும். ராகுவும்-கேதுவும் நேர் எதிர் எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள். இந்த 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் முக்கிய கிரங்களின் புதன், சுக்கிரன், சனி ஆகியோர் மகர ராசியில் இணைந்திருகிறார்கள். இது ஒரு சிறப்பு அம்சமாகும். தற்போது ராகு ரிஷிப ராசியில் இருக்கிறார். கேது விருச்சிக ராசியில் இருக்கிறார். 21.03.2022 அன்று (திங்கள் கிழமை) பகல் 3.13 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அன்று ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிகத்தில் இருந்து துலாமிற்கும் இடம் பெயருவார்கள். மேலும் இவர்கள் 08-10-2023 வரை இதே இடத்தில் இருப்பார்கள். அடுத்த ராகு-கேது பெயர்ச்சி ஏற்படுவதுற்குள் சனிபகவான் ஒரு முறையும், குருபகவான் இருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஜோதிட விதி படி ராகு - கேது 3,6,11 இடத்தில் இருந்தால் நல்ல பலன்களை தருவார். மற்ற இடத்தில் இருந்தால் இருக்கும் இடத்தை பொருத்தும், ராகு-கேது பலத்தை பொருத்தும் நன்மை, தீமையான பலன்களை செய்வார் என்பது ஜோதிட விதி. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலன் பார்க்கக்கூடாது. அதன்படி, முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது ஆகியவையின் இருப்பிடத்தைக்கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ளது கோச்சார பலன்களே. இதில் அவரவர் ஜாதத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாக இருக்கும் பட்சத்தில் பலன்கள் மாறலாம். ஆகையால் சரியான பரிகாரம் மூலம் ராகு கேதுவால் வரும் பிரச்சனைகளை குறைத்து வாழ்வில் முன்னேற்றம் அடையாளம். ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology), அலைபேசி : 9003019831 |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831