Ragu Kethu Peyarchi Palan - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Ragu Kethu Peyarchi Palan
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ஸ்ரீ சார்வரி ஆண்டில் ஆவணி மாதம் 16ஆம் தேதி செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ்கிறது. நவ கிரகங்களில் நிழல் கிரகமாகவும், சர்ப்ப கிரகமாகவும் இருக்கிறது ராகு - கேது கிரகங்கள். இந்த கிரகங்கள் ஒவ்வொரு ஒன்னறை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியால் தற்போது மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார். அதே போல கேது பகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள். ரிஷபம் சுக்கிரன் வீடு என்பதால் ராகு சுக்கிரனை போலவும், விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால் கேது செவ்வாயை போலவும் செப்டம்பர் மாதம் முதல் பலனை கொடுப்பார்கள். இந்த ராகு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ராகுவும் கேது ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு கேதுகளுக்கு ஓவ்வொரு நாளிலும் தனியாக ஓன்றறை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த காலத்தை ராகுகாலம், எமகண்டம் என்று சொல்வர். பொதுவாக ஜோதிட விதி படி ராகு - கேது 3,6,10,11 இடத்தில் இருந்தால் நல்ல பலன்களை தருவார். மற்ற இடத்தில் இருந்தால் இருக்கும் இடத்தை பொருத்தும், ராகு-கேது பலத்தை பொருத்தும் நன்மை, தீமையான பலன்களை செய்வார் என்பது ஜோதிட விதி. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலன் பார்க்கக்கூடாது. அதன்படி, முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது ஆகியவையின் இருப்பிடத்தைக்கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (2020 - 2022)
இந்த ராகு கேது பெயர்ச்சியால் ராகுவினால் நன்மை அடையும் ராசிகள் - மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம், நன்மை அடையும் ராசிகள் மற்ற ராசிகள் சுமாரான பலன்கள் தரும்.

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர்
ஜோதிடர் ஆலந்தூர் A. வினோத் குமார், Ph.d Astrology (அலைபேசி: 9003019831)


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




 
Tamil Daily Calendar 2021 | Tamil Monthly Calendar 2021 | Tamil Calendar 2021 | Tamil Muhurtham Dates 2021 | Tamil Wedding Dates 2021 |
Tamil Festivals 2021 | Nalla Neram 2021 | Amavasai 2021 | Pournami 2021 | Karthigai 2021 | Pradosham 2021 | Ashtami 2021 | Navami 2021 | Karinal 2021 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2020 | Tamil Monthly Calendar 2020 | Tamil Calendar 2020 | Tamil Muhurtham Dates 2020 | Tamil Wedding Dates 2020 |
Tamil Festivals 2020 | Nalla Neram 2020 | Amavasai 2020 | Pournami 2020 | Karthigai 2020 | Pradosham 2020 | Ashtami 2020 | Navami 2020 | Karinal 2020 | Daily Rasi Palan |