மகர ராசி நேயர்களே : கடந்த ஒன்றை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு பகவான், ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் நிலையில் பல மாற்றங்களையும், ஏற்றங்களையும் உண்டாக்கி வந்தார்கள். இந்த நிலையில் 21.03.2022 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகி 8.10.2023 வரை அங்கிருந்து ஒன்றை ஆண்டுகளுக்கு பலன்களை வழங்கிட இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு தொழிலைக் குறிக்கும் 10ம் இடத்திற்கு கேது வர உள்ளார். தொழில் ஸ்தானத்தில் அமரும் கேது தொழில் முறையில் சிறிது சிரமத்தினைத் கொடுத்தாலும், நல்லதொரு அனுபவங்களைத் கற்றுத்தரும்.
செய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் அலட்சியம் காட்டக் கூடாது. கவனக்குறைவாக செயல்பட்டால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும். 4ம் இமாகிய சுக ஸ்தானத்தில் ராகுபகவான் அமர உள்ளார். ராகுவின் சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் வகையில் இருக்கும். வீடு, வாகனம், மனை சொத்துக்கள் புதிதாய் சேரும். 4-ம் இடத்து ராகு, ஓய்வினைக் கெடுத்து, சிறிது அலைச்சலைத் தந்தாலும் அதிலும் நாம் எதிர்பார்க்கும் லாபத்தினைப் பெற்றுத் தருவார். வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குடும்ப ஒற்றுமை சுமாராக தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து போவது அவசியம். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண், வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். பெருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொண்டு ஜெயிப்பீர்கள். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும்.
ராகுவின் சாதகமான சஞ்சாரம் புதிய சொத்துகளைச் சேர்க்கும். குடியிருக்கும் வீட்டினில் பராமரிப்பு பணிகளைச் செய்வது, வீட்டினை அழகு படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்களிடம் மனஸ்தாபம் உண்டானாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாளடைவில் உங்களிடம் உறவினர்களிடம் மீண்டும் வந்து சேருவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
உத்யோகத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் மேலதிகாரிகளின் ஆதரவோடு செயல்பட்டு எடுத்த பணியில் வெற்றி காண்பீர்கள். புதியதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலினை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்த்த வங்கி கடன் எந்தவிதத் தடையுமின்றி கிடைக்கும். தொழில், வியபாரத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும்.
இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். பொதுத்தொண்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்நின்று செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி தோல்வி பயத்திலிருந்து உங்களை நீக்கி வெற்றி கனியை ருசிக்க வைக்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831