மேஷ ராசி நேயர்களே : மேஷ ராசிகாரர்களுக்கு ஜென்ம ராகு, களத்திர கேது என கிரக பெயர்ச்சி நடக்கவுள்ளது. இது வரை 2ம் வீட்டிலிருந்து ராகு பகவான் குடுமத்தில் சில குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பார். 21.03.2022 அன்று ராகு பகவான் ஜென்ம ராசியிலும் - கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். ஜென்ம ராசியில் அமர்ந்து ஏழாமிடத்து பார்வையால், குடும்பத்தில் சில குழப்பங்கள் விளைவிக்கும், கேது பகவான் பாதகமான இடத்தில் அமர்ந்து உற்சாகத்தில் குறைவையும், எதிரிகளையம் சமாளிக்கும் பொறுப்பை தருவார், கேட்பார் பேச்சை கேட்டு நம்பாமல் சுய சிந்தனையுடன் வாழ்ந்தால் மட்டுமே வளம் பெற முடியும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் ஒரு சில மாறுதல்களை உண்டாக்கும். ராசியில் ராகு இருப்பதால் மனதில் அநாவசியமான குழப்பம் உண்டாகும். உங்கள் செயல்பாடுகள் அடுத்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும். இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும். பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். பூர்விக சொத்துக்களால் அனுகூல பலன்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் சில உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். திருமணத்தில் இருந்த தடை இனி நீங்கும்.
வெளியிடங்களில் பிரச்சனைகள் வராமல் இருக்க அமைதி காப்பது நல்லது. நீங்கள் நல்லது செய்யப் போனாலும் அது அடுத்தவர்களின் பார்வைக்கு தீயதாகவே தெரியும். இதனால் நீங்கள் செய்ய வேண்டிய கடமையைத் தவிர அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். ஜென்ம ராசியில் ராகு இணைவதால் உடலில் சிறு காயங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதில் நினைத்ததை எளிதாக அடைய பல குறுக்கு வழிகளை ராகு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவார்.
ஏழாம் இடத்தில் வந்து அமர உள்ள கேதுவினால் உண்டாகும் நன்மை சத்ரு நாசம் என்பதே. மறைமுக எதிரிகள் காணாமல் போவர். பிரியமானவர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு சந்தோசமாக செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். பூர்விக சொத்துகளில் சில பிரச்னைகள் வரக்கூடும். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம்.
உத்யோகத்தில் இட மாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய கட்டாயம் உருவாகலாம். உத்யோகத்தில் பொறுமையும், நிதானமும் தேவை. உத்யோக இடத்தில் கொடுத்த வேலையை தாமதமின்றி செய்து முடிப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.
குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. பண சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. இன்றைய சூழலில் நீங்கள் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நன்மை தரும். இந்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் குரு-சனி சாதகமான இடத்திலேயே இருக்கிறது. ராகு-கேது மட்டுமே சற்று பாதகமான பலன்களை தருகின்ற 1-7-ஆம் இடங்களில் இருக்கின்றது, எனவே ராகு-கேதுவுக்கு முறைப்படி பரிகாரம் செய்வது மிகவும் அவசியம். இந்த பெயர்ச்சி உங்களுக்கு நன்மை, தீமை இரண்டும் கலந்த கலவையான பலன்களை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831