சிம்ம ராசி நேயர்களே : கடந்த ஒன்றை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் ராகு பகவான், ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களையும், மாற்றங்களையும், சில சங்கடங்களையும் வழங்கிவந்தனர். இந்த நிலையில் 21.03.2022 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகி, 8.10.2023 வரை அங்கிருந்து உங்களுக்கு ஒன்றை ஆண்டுகளுக்கு பலன்களை வழங்கிட இருக்கிறார்கள். இந்த பெயர்ச்சி நற்பலன்களைத் தரும் வகையில் அமையும். மூன்றாம் இடத்தில் அமரும் கேதுவின் அருளால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். மனோ தைரியத்துடனும் செயல்படுவீர்கள். மனதில் நினைத்த காரியத்தை உடனே செயல்படுத்துவீர்கள். கேதுவின் 3-ம் இடத்துச் சஞ்சாரம் உடன்பிறந்தோருடன் சின்ன கருத்து வேறுபாட்டினைத் ஏற்படுத்தும். உங்களது செயல்கள் அடுத்தவர் பொறாமை படும்படி இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் வாங்க கூடிய யோகம் அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது முக்கியம். பண வரவு தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்களில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். முக்கியமான பணிகளை செய்ய யாரையும் நம்பாமல் நீங்களே நேரடியாக காரியத்தில் இறங்குவது நல்லது. புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள்.
ராகு 9ம் இடத்தில் அமர்வது ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். பெற்றோர் மற்றும் உங்கள் வாரிசுகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகிறது.
உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
9ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வாகன பயணத்தின் கவனமாக இருக்கவும். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி எங்கும், எதிலும் உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831