Sani Peyarchi Palan

Sani Peyarchi Palan
சனி பெயர்ச்சி பலன்கள்
ஸ்ரீ விகாரி வருடம் தை மாதம் 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.03 மணியளவில், ஆங்கில தேதிப்படி ஜனவரி மாதம் 24ம் தேதி (24-01-2020) திருகணிதப் பஞ்சாங்கத்தின் மாறுகிறார். (ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார். (திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையாக கொண்டது.) பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும், சனி பகவானால் உண்டாகக்கூடிய எல்லாவிதமான பலன்களையும் இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. சனி பகவான், கோச்சார ரீதியாக மகர ராசியில் சஞ்சரிக்கும் போதும், வக்கிர கதிக்கு ஆளாகும் போதும் சில ராசியினருக்கு சங்கடங்கள் உண்டாகலாம். பொதுவாக ஜாதகரின் ராசிக்கு 12ம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் போது அவருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. அங்கிருந்து ஜென்ம ராசியிலும். அதன் பிறகு 2-ம் வீட்டிலும் சனி பகவான் இருக்கும் வரை ஏழரை சனியின் முதல் சுற்று நடைபெறும், ஜாதகருக்கு சோதனையை ஏற்படுத்தி மங்கு சனியாக விளங்கும் சனிபகவான், இரண்டாம் சுற்றின் போது பொங்கு சனியாக மாறி வழங்குகிறார். இந்த சனிப்பெயர்ச்சி தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களையும் தனித்தனியாக பார்க்கலாம். சனி பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் மகர ராசியினருக்கு ஜென்ம சரியாகவும், கும்ப ராசியினருக்கு விரைய சனியாகவும் தனுசு ராசியினருக்கு பாதக சனியாகவும், மிதுன ராசியினருக்கு அஷ்டம சனியாகவும், கடக ராசியினருக்கு கண்ட சனியாக விளங்க போகிறார். மேலும் மகரம், கும்பம், தனுசு, மிதுனம், கடகம், துலாம் ராசியினர் சிரமங்களுக்கு ஆளாகலாம்.

ஜனன ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமைய பெற்றவர்களுக்கும், தசாபுத்திகள் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் தற்போதைய சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏதும் வராது. அனைத்து ராசிக்காரர்களும் சனிப்பெயர்ச்சின் போது அருகிலுள்ள அழைத்திற்கு சென்று சனி பகவானை வணங்கி வரவேண்டும். திருநள்ளாறு சென்று சனிஈஸ்வரரை வழிபட்டு வரலாம். அல்லது சனி பகவானின் ஸ்தலங்களான திருக்கொள்ளிக்காடு, குச்சனுர் ஆகிய ஊர்களில் எழுந்தருளியுள்ள சனீஸர பகவான் ஆலயத்தை நாடி சென்று பரிகாரம் செய்வது நன்மை அளிக்கும்.

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology), செல் : 9003019831

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.