Sani Peyarchi Palan

Sani Peyarchi Palan

    THULAM Sani Peyarchi Palan

துலாம் ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு சனிபகவான் 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்து பல கஷ்டங்களை கொடுத்து வந்தார். இனி சனி பகவான் 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெற போகிறார். இது வரை பட்ட கஷ்டங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பதில் சொல்லும். சனி பகவானுக்கு 5ம் இடம் அவ்வளவு சிறப்பு இல்லை என்றாலும் 4ம் இடத்தை காட்டிலும் 5ம் இடம் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். சனி தன் 3,7,10 பார்வையாக 7ம் இடமான களத்திர ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 10ம் இடமான லாப ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தையும் பார்வை செய்கிறார். புதிய முயற்சிகள் எடுக்கும் முன் யோசித்து செய்யவும். பண வரவு சிறப்பாக இருக்கும் என்பதால் எத்தகைய சிக்கலையும் சுலபமாக சமாளிக்க முடியும். மனதில் குழப்பான எண்ணங்கள் வரும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வாகன பராமரிப்பு செலவு கூடும். உடலில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதை சரி செய்ய முடியும். உடல் நலம் சீராகும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் நிறைய செலவுகள் வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சி சிறிய தடைக்கு பின் கைகூடும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தனவரவு அதிகரிக்கும். உங்கள் நீண்ட ஆசைகளை நிறைவெற்றிகொள்ள சனி பகவான் வழி செய்வார். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்து செயலாற்றவும். மனதில் இருந்த கவலைகள் குறையும். விலகி இருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்தில் வந்து இணைவர். பொருளாதாரமும் செழிக்கும். வெளியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு. சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பெரியளவில் சாதனைகளை செய்ய முடியும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். பயணங்களால் ஒரு சில நன்மைகள் கிடைக்கும். புதிய நண்பர்ககள் அறிமுகமாவர். மனதில் தெம்பு கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்படாமல் சிக்கனமாக இருக்கவும். மறைமுக எதிர்ப்புகளும் குறையும். சனி 5; சஞ்சரிக்கும் இந்த காலத்தில் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குரு 22.4.2023 முதல் 1.5.2024 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது நல்ல அமைப்பாகும், இதனால் பொருளாதார அனுகூலங்கள், சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தற்போது ஜென்ம ராசியில் கேது, 7, ராகுவும் வரும் 30.10.2023 வரை சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரும் 30.10.2023 முதல் 18.5.2025 வரை உங்கள் ராசிக்கு 6ல் ராகு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு. ஒட்டுமொத்தமாக குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகும்.

உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நல்ல ஒரு உற்சாகத்தை தரும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்யும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு தனியாக தொழில், செய்யும் வாய்ப்பும் வரும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைத்து நிறைய சேமிக்கும் வேண்டும் என்ற எண்ணம் வரும்.

பரிகாரம் : அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்

( For Thulam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Thulam (Libra) [Stars: Chitirai 3,4 Swathi 1,2,3,4 Visakam 1,2,3 quarters]

Expectations are very high and almost same amount of blockages on either way. Life goes with good and bad combinations. Kind to close ones, able to face difficulties, playing around the deck, talkative meaningfully, showing love and care to family and friends are some of the good qualities. Convinced only, if logically correct as per the belief. Medicine, hardware, technology, jewellery, vehicle, travels, cargo, beauty and cosmetics, fancy related business gives more profit. Need to get hold on belief and confidence to overcome difficulties. Heartily kind and quiet natured people who seek friends and elders advise for everything. If not reaching high targets, they maintain balance somehow with the help of will power. Famous personalities and people help them a lot to come up in life and they maintain range of status from bottom to top. Excellent care taking ability of thula rasi helps many people around the world with dedication.

'Friend in need is a friend indeed' proverb fits well for thula rasi as helps others by knowing their requirements. Carry work/ job pressure many times; but hard work and proving ability will bring them up in life. With good health people may live up to 80 to 85 years. Travel brings reasonable expectations; but they try to stay in their own place. Many a time excellent team coordination and team driven abilities are able to do any job completed beyond than the expected levels. Some thula rasi people perform well in the musical/ dance & singing areas if Venus placed well in horoscope. Better not to disclose personal matters to others if not required. Recommendations will help in many occasions to push others on the need basis who tend to help on return. Graceful, polite and admire beauty in all forms. Lucky colours are white, saffron and blue, stones are blue sapphire, cat's eye, and numbers are 1, 6 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.