தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாக்கு வன்மையால் காரியானுகூலம் உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் பல வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரியமானவர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பழைய சிக்கல் ஓரளவு தீரும். வீடு, வாகனம் ஆகியவற்றால் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. முக்கிய பணிகளை செய்யும் போது ஒரு சில தடங்கல் வந்தாலும் இறுதியில் சுபமாக முடியும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை சமாளிக்க வேண்டிவரும்.
பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com