விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஆனந்தமும், குதூகலமும் நிலவும். பொருளாதார வளம் மேம்படும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் கூடும். பேச்சு திறமையால் பல சிறப்பான செயல்களை செய்ய முடியும். மனதில் பல கவலைகள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் பணிகளை தொடரவும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். உடன்பிறப்பு வழியில் நன்மை உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது கடினமாகும். சற்றும் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள், எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். பக்தி உணர்வு மேலோங்கும். எதையும் ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் இருக்கும். உத்யோகத்தில் புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com