Tamil Rasi Palan Yearly

2023 Tamil Rasi Palan Yearly
2023 தமிழ் ஆண்டு ராசி பலன்கள்
2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மதங்களுக்குரிய தலைப்பில் மேஷ ராசியினர் முதல் மீனராசியினர் வரை பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 2023 புத்தாண்டு ராசி பலன்கள் என்பது பொதுவானது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, ஜென்ம நட்சத்திரம், லக்கினம், பிறந்த காலத்தில் உள்ள தசை, தற்சமயம் நடைபெறும் தசை மற்றும் புக்தி, இன்றைய கோசாரம் ஆகியற்றிக்கு தக்கவாறு ஒவ்வொருக்கும் ஜாதக பலன்கள் மாறுபடும்.

நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புது வருடம் 2023 தமிழ் சுபகிருது வருடம் மார்கழி மாதம் 17ம் தேதி (01.01.2023) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி, மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னத்தில் சித்தயோகம் கூடிய தினத்தில் ஆங்கில புத்தாண்டு 2023 பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் தேடி வரப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி சுபிட்சங்கள் கிடைக்கப்போகிறது.

ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. 2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் நிகழப்போகிறது. முக்கிய நான்கு கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி வரிசையாக நிகழப்போகிறது. (2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவான் மே மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்கிறார். மே மாதத்திற்குப் பிறகு மேஷ ராசிக்கு வந்து அமர்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்). இந்த வருடம் பிறக்கும்பொழுது குரு பகவான் மீன ராசியிலும் சனிபகவான் மகர ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் மற்றும் குரு பகவான் சஞ்சாரத்தையும் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தையும் கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2023 எழுதப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு பன்னிரெண்டு (12) ராசிக்கான பலனில் இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொது பலன்களே. இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.



ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், (Ph.d Astrology) - செல் : 9003019831 / 9944719963







Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.