மகர ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைசனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசி அதிபதி என்பதால் அதிக கெடுதலை செய்யமாட்டார். எதிலும் நிதானமாக செயல்பட்டால் தேவைகளை பூர்த்திசெய்து வாழ்வில் ஏற்றங்களை அடைய முடியும். குடும்ப நபர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். இது வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் இனிதே நடைபெறும். இந்த புத்தாண்டு ஏழரை சனியோடு தொடங்குகிறதே என்ற அச்சம் வேண்டாம். நீங்கள் கடுமையான உழைப்பாளி என்று அனைவரும் அறிந்த ஒன்று, முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி வரும் அவ்வளவு தான், மற்றபடி எந்த தொந்தரவும் இல்லை. இந்த ஆண்டு நீங்கள் எடுத்து வைக்க போகும் ஒவ்வொரு அடியும் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும். எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். வெளியில் கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும். நேர்முக மறைமுக எதிரிகளிடமிருந்து விலகி நின்று செயல்படுவீர்கள். எதிர்பார்த்துக்கொண்டிருந்த காரியங்கள் இப்பொழுது நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உத்யோகத்தில் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். மனதினில் தர்ம சிந்தனைகளும், தியாக உணர்வுகளுமே அதிக அளவில் இடம் பிடிக்கும். அடுத்தவர்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். எடுத்த வேலையை முடிப்பதற்கு நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்து வரும். இக்கட்டான நேரத்தில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வேண்டியவர்கள் உதவி செய்ய தயாராக இருப்பர். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றவும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம், அதனால் பல சிக்கல் வரும். வாகன பயணத்தில் கவனமுடன் செயல்படவும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உங்களை சுற்றிலும் ஒரு கூட்டம் இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். தெய்வ பலத்தால் அனைத்தும் சுலபமாக கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்யோகத்தில் சிலர் எதிராக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியாபாரம் சிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை எதிர்த்து மற்றவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமையும்.
பரிகாரம் : சாஸ்தாவை மனதார வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831