மீன ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஆதாயம் உண்டு. உங்கள் ராசியின் 11-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி பகவான் இந்த ஆண்டு நல்ல பலன் தருவதுடன் பல வழிகளில் வருமானத்தை அதிகரிக்கவும் செய்வார். குரு பகவான் 12-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார், உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நன்மையை தரும். இந்த ஆண்டு விடியல் தர போகும் ஆண்டாக இருக்கும். தெய்வ அருள் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வித்யாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் இந்த ஆண்டு நிறைய சாதிக்க முடியும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது நஷ்டங்களும் ஏற்படும். உங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். பிரியமானவர்கள் வழியில் முன்னேற்றங்கள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்ள வழி வகை செய்துகொள்ளவும். உங்களுக்குத் தெரியாத விவகாரங்களில் இருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. நண்பர்களுக்காக உதவப்போய் முக்கியமான நபர்களைப் பகைத்துக் கொள்ள நேரிடும். பல வழிகளிலும் பொருள்வரவு இருந்து வரும். அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகி வருவது நல்லது. அவசரப்பட்டு இறங்கும் செயல்களில் அவப்பெயர் உண்டாகலாம், கவனம் தேவை. குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். புதிய சொத்துக்கள், புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பொருளாதார வளம் கூடும். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களை செய்வதன் மூலம் நிறைய நன்மை உண்டு. தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருந்தாலும் சேமிக்க முடியாமல் போகும். சொத்து விவகாரங்களில் விட்டு கொடுத்து போவது நல்லது. சொந்த வீடு வாங்கும் முயற்சி நல்ல பலனை தரும். மற்றவர்கள் உங்களை மதிக்கும் படி நடந்துகொள்ளவும். எப்போதும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க விருப்பம் ஏற்படும். திருமணம் வரம் தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புது மன தம்பதியர்களுக்கு சீக்கிரத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும். வர வேண்டிய பெரிய தொகை கைக்கு வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும், உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். புதிய தொழில் தொடர்ந்து அனுகூலமான பலன்களை தரும். இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் ஆண்டாக அமையும்.
பரிகாரம் : விரதமிருந்து குரு பகவானை வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831