மேஷ ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் தன காரகன் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் சனி பகவான் தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் உங்கள் முயற்சிக்கு நற்பலன்கள் கிடைக்கும். குடும்ப நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த ஆண்டு எதிர்காலத்தைப் பற்றி சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். நீண்ட நாள் கனவை நினைவாக்க முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி வரும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். முக்கிய காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பின் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். இந்த வருடம் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மனதில் எழும் எண்ணங்களை நல்ல விதமாக செயல்படுத்த முடியும். எப்போதும் எல்லா விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படவும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் செய்ய தொடங்கவும். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். பிரியமானவர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. பெற்றோர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளவும். வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சுப செலவுகள் அதிகளவில் ஏற்படும். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள புது வழியை தேடிக்கொள்ளவும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உடல் நலனில் அதிக கவனம் தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். சொந்தவீடு கனவு சீக்கிரத்தில் நனவாகும். நிலுவையில் இருந்து வரும் சொத்துப்பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உறவினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளவும். பெற்றோரின் உடல்நிலையிலும், மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இக்கட்டான சூழலில் பெண்களால் ஆதாயம் பெற முடியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புது வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. இந்த புத்தாண்டு எல்லா வகையிலும் நற்பலன்கள் அள்ளித்தரும்.
பரிகாரம் : செவ்வாய்கிழமையில் விரதமிருந்து முருகரை வழிபட கஷ்டங்கள் குறையும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831