ரிஷப ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 10-ம் வீட்டிலும், சனி பகவான் 9-ம் சஞ்சரித்துள்ளதால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். இந்த புத்தாண்டு நிச்சயம் நல்லதும், கெட்டதும் கலந்த ஆண்டாக இருக்கும். எல்லாம் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க போகிறது என்பது தான் உண்மை. உங்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் உரிய நேரத்தில் கிடைத்து விடும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றினை பெற முடியும். பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுக்க முடியும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை நிலவும். திருமண முயற்சிகளில் தடை விலகி நல்லது நடக்கும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. சென்ற ஆண்டு பட்ட கஷ்டத்தை இந்த ஆண்டு சரி படுத்திக்கொள்ள முடியும். மனம் சந்தோஷமாக இருக்க பணம் நிறைய செலவு செய்ய வேண்டிவரும். பண விஷயத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். வந்த கஷ்டங்கள் கூட பனிப்போல விலகும். மற்றவர்கள் உங்கள் மீது சுமத்தும் பழிச் சொல்லை பொருட்படுத்த வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து ஏற்கெனவே செய்துவரும் சொந்த வேலைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தவும். அடுத்தவர்களை நம்புவதை விட நீங்களே நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமையை கடைப்பிடிக்கவும். வீண் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். பொருள் வரவு அதிகமாகும். முன்பு பயணங்களால் ஏற்பட்ட அலைச்சல்கள் இப்போது குறையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வழிபாட்டை உரிய நேரத்தில் செய்ய முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவிடையே இருந்த பகைமை மாறும். புது பொருட்களையும், அசையும், ஆசையா புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். உற்றார், உறவினர்களால் ஒரு சில சிக்கல்கள் வரக்கூடும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் ஒன்று சேருவர். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மறைமுக எதிரிகளால் ஒரு சில தொந்தரவு ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் கூட பகைமை பாராட்டுவர். இழுபறி நிலையில் உள்ள வம்பு வழக்குகளில் தடையின்றி ஜெயிக்க முடியும். பல பெரிய மனிதர்களின் நட்பு நம்பிக்கை அளிப்பதாக அமையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும். நீங்கள் திட்டமிடாது செய்யும் காரியங்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பல நல்ல வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். இனி எல்லாம் நல்ல காலம் தான் என்கின்ற மன உறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும். தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்கவும். இந்த ஆண்டு பல சோதனைகளை தாண்டி பல சாதனை படைக்கும் ஆண்டாக இருக்கும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு எல்லா வகையிலும் சிறப்பை தரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831