துலாம் ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 5-ம் வீட்டிலும், சனி பகவான் 4-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையையும் வல்லமையும் உண்டாகும். இந்த ஆண்டு இனிமையான ஆண்டாக அமையும். பொருளாதார நிலை உயரும். இதுவரை இருந்து வந்த தொல்லைகள், கஷ்டங்கள், கடன்சுமைகள் எல்லாம் குறையும். மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். நீங்கள் எப்போதும் சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்ற முடியும். வாய்ஜாலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த மன கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். புதிய வீடு, மனை வாகனம் எண்ணம் வரும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கி சந்தோஷத்தை வரவழைக்க முடியும். பெற்றோர்கள் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். அடிக்கடி பயணம் செல்ல வேண்டிவரும். புது வீடு மாற்றம் ஏற்படும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடி ஏறும் வாய்ப்பு வரும். பெற்றோர்கள் அனுசரணையாக இருப்பர். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பயர் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். குழந்தை இல்லாதவர்களுக்கு தெய்வ அனுக்கிரகத்தால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள முடியும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். பூர்விக சொத்துக்களில் இருந்த சிக்கல் தீரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உத்யோகத்தில் அமைதியான சூழல் நிலவும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த புத்தாண்டு கெடுதல்கள் குறைந்து நன்மைகள் பெருகும் ஆண்டாக அமையும்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரத்தில் உள்ள சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831