விருச்சிக ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் சனி பகவான் 3-ம் வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றியம், எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றலும் உண்டாகும். குடும்பத்தில் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும். பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். மனக்குழப்பம் நீங்கி தெளிவு நிலை உண்டாகும். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். பிரியமானவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். புதியவர்களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த புத்தாண்டு முதல் வந்த தடைகள் எல்லாம் விலக போகிறது. புதிய பாதையில் பயணிக்க தொடங்கவும். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக எடுத்து செய்வீர்கள். அடுத்தவர்களை எளிதில் கவரும் பேச்சு திறமை இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதால் நன்மை உண்டாகும். உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை பெற முடியும். அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவை விட செலவுகள் அதிகளவில் இருக்கும். சொத்துப் பிரச்னைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களின் வழியில் பொருள் விரையம் ஏற்படும். வாகனங்களில் இயக்கும்போது அதிக கவனம் தேவை. நண்பர்களிடம் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். எதையும் எதிர்கொள்ளும் துணிவையும், தைரியத்தையும் பெற முடியும். பண வரவில் ஏற்ற தாழ்வு இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளர்வர்களின் தொடர்பு கிடைக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். புண்ணிய ஸ்தங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். திட்டமிட்ட பயணங்கள் ஓரளவு நன்மையை தரும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். ப்ரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். புது வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சுப காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். எந்த ஒரு காரியத்திலும் தீர யோசித்து முடிவு எடுக்கவும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831